நாட்டில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கொழும்பு நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் ஊடக அறிக்கையொன்றினையும் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் ரோஸி சேனாநாயக்க கூறியுள்ளதாவது, ”கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முகமாக கொழும்பு நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் சில நாட்களுக்கு மூட வேண்டும்.
இதனூடாக கொழும்பு நகரத்தில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும் வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து, வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்கதோர் விடயமாகும்.
இதேவேளை 2022 ஜனவரிக்குள் 30,000 பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பர் என்ற உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.