இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் (பூஸ்டர் டோஸ்) செலுத்துவது குறித்து தற்போதுவரை விவாதிக்கப்படவில்லை என தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் தான் பூஸ்டர் டோஸ் குறித்து கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் பூஸ்டர் டோஸ் பின்பற்றப்பட வேண்டுமா என்பதை அறிவியல் ஆய்வுகள் மூலமாகவே முடிவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.