நாட்டை குறைந்தது ஒரு வாரத்துக்கு முழுமையாக முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பௌத்த பீடங்களின் ஆலோசனையை மதித்து ஆட்சியை முன்னெடுக்கும் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொரோனா தொற்று பரவலானது நாடு முழுவதும் ஒரு பேரழிவு சூழ்நிலையை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, ஒரு வாரத்திற்கு முடக்கம் இருக்கும் போது மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலுயுறுத்தியுள்ளனர்.
மேலும் சுகாதார நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் மகாநாயக்க தேரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.