தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஓர் அணியில் உள்ளபோது ஒரு சில நாடுகள் இரட்டை வேடம் போடுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில், இது குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், தீவிரவாதத்தை ஒடுக்க எட்டு அம்ச திட்டங்களையும் அறிவத்துள்ளார். அதேநேரம் தீவிரவாதத்தை உயர்த்தி பிடிக்கக் கூடாது எனத் தெரிவித்த அவர், நியாயப்படுத்தக் கூடாது எனவும் கூறினார்.
நிதி ஆதாரங்களைவ வழங்கக் கூடாது உள்ளிட் பல்வேவேறு கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.