அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் மேம்படும் என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தலைவர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், புதிய வர்த்தக உடன்பாடுகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்படாது என அமெரிக்கா கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனினும் இரு நாடுகளின் தரப்பில் வர்த்தக உறவை மேம்படுத்த பல்வேறு வழிகள் கண்டறியப்படும் எனத் தெரிவித்த அவர், இந்த நடவடிக்கை ஏற்றுமதி துறைக்கு புதிய ஊக்குவிப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவுடன் உடன்பாடுகளை மேற்கொள்ள அவுஸ்ரேலியா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பிரித்தானியாவுடன் தடையில்லா வர்த்தக உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனுடனான வர்த்தக உடன்பாடு ஏற்பட நீண்ட காலமாகும் எனவும், அதற்கான பணிகள் விரைவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.