ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குப் பின்னர் அமெரிக்கா தனது குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து இரவு பகலாக அமெரிக்கா ஆயிரக்கணக்கானோரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றி வருகிறது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட விமானங்களில் சுமார் 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.
அமெரிக்க விமானங்களில் 10 ஆயிரத்து 400 பேரும் அதன் 61 நட்பு நாட்டு விமானங்கள் மூலம் 5 ஆயிரத்து 900 பேரும் காபூலை விட்டு வெளியேறினர்.
மேலும் பல ஆயிரம் பேர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் அமெரிக்க விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.
எவ்வாறிருப்பினும் 31ஆம் திகதிக்குள் அனைவரையும் வெளியேற்றிவிடுவோம் என ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.