நைஜீரியாவில் துப்பாக்கி ஏந்தியவர்களால் கடந்த மே மாதம், இஸ்லாமிய பாடசாலையிலிருந்து கடத்தப்பட்ட பல மாணவர்களை விடுவிக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அபுபக்கர் அல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
எத்தனை மாணவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதற்கான சரியான எண்ணிக்கையை தன்னால் கொடுக்க முடியவில்லை, ஆனால் மாணவர்கள் யாரும் சிறைபிடிக்கப்படவில்லை’ என அவர் மேலும் கூறினார்.
மாணவர்கள் அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நைஜர் மாநிலம், டெஜினாவில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த சுமார் 136 மாணவர்கள் கடத்தப்பட்டு பணய தொகை கோரப்பட்டது.
இதில் ஜூன் மாதம் 15 மாணவர்கள் தப்பிச் சென்றதாகவும் மேலும் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்டபோது இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவை நீண்டகாலமாக பயமுறுத்தி, கொள்ளையடித்தல், கால்நடைகளைத் திருடுவது போன்ற அட்டூழியங்களை செய்யும் உள்நாட்டில் அறியப்பட்ட ஆயுதக் கும்பல் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களை கடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.