கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கான கால எல்லையை குறைப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில். இதனை மத்திய அரசு மறுத்துள்ளது.
தேசிய தடுப்பூசி ஆலோசனைக் குழுவின் தலைவர் டொக்டர் அரோரா இதனைத் தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் செலுத்துவதற்கான இடைவெளியை குறைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது முதல் தடுப்பூசிக்கும் இரண்டாவது தடுப்பூசிகும் இடையே 12 முதல் 16 வார காலங்கள் வரை இடைவெளி விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை செப்டம்பர் மாதத்தில் 20 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.