யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம்- கொழும்புத்துறையைச் சேர்ந்த 39 வயதான பெண் ஒருவரும் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.