அவுஸ்ரேலியா – மெல்போர்னில் கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு தீவிரமாக பரவிவந்த நிலையில், அங்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
70 இலட்சம் மக்கள் தொகை கொண்ட மெல்போர்ன் மற்றும் அதை சுற்றியுள்ள விக்டோரியா மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு வியாழக்கிழமை முடிவுக்கு வரவிருந்தந்து.
இந்த நிலையில், ஊரடங்கை திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என மாநில பிரிமியர் டான் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஊரடங்கை திரும்பப்பெறலாம் என நினைத்தால் நீண்ட நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஊரடங்குக்கு முன்பான சுதந்திரத்தை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறோம். மீண்டும் அந்த நாட்கள் திரும்பி வர வேண்டும் என தீவிரமாக விரும்புகிறோம்” என தெரிவித்தார்.
மெல்போர்னில் ஆறாவது முறையாக விதிக்கப்படும் ஊரடங்கு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.