மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை நோயுள்ளவர்கள் ஆறு மில்லியன் பேர், தகுதி உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிற்கான முன்பதிவு மற்றும் ஊசிக்கான நேரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பரின் இரண்டாவது வாரத்தில் இருந்து மூன்றாவது அளவு தடுப்பூசிகள் போட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
நோர்ட் மாவட்டத்தில், கடந்த வார இறுதி முதலே இந்த மூன்றாம் அலகுக் கொரோனாத் தடுப்பூசிகளிற்கான முன்பதிவுகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கொரோனா தடுப்பூசிக்கும் கர்ப்ப காலத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என பிரான்ஸ் குழந்தைகளுக்கான நோயெதிர்ப்பு துறையின் பேராசிரியரும், உயிரியலில் ஆராய்ச்சியாளரும் மருத்துவருமான அலைன் ஃபிஷர் தெரிவித்துள்ளார்.