வடமேற்கு லண்டனில் நடந்த பெரிய சண்டையின் போது கத்தியால் குத்தப்பட்ட ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாரோவின் ரயில்வே வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதன்போது பதின்ம வயதினரின் அல்லது 20 வயதிற்குட்பட்ட நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் கத்தியால் குத்தப்பட்டனர்.
இதில், இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமான ஆனால் நிலையானதாக இருப்பதாக பெருநகர பொலிஸ்துறை தெரிவித்துள்ளது. மற்ற மூன்று பாதிக்கப்பட்டவர்கள் நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ஆம்புலன்ஸ் கார்கள், ஒரு காரில் ஒரு மருத்துவர், இரண்டு மேம்பட்ட துணை மருத்துவர்கள் மற்றும் இரண்டு சம்பவ பதில் அதிகாரிகள் சம்பவத்திற்கு அனுப்பப்பட்டதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறினார். சம்பவ இடத்திற்கு ஒரு எயார் ஆம்புலன்ஸும் அனுப்பப்பட்டது.
இச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.