ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்-கே அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக, பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து றோயல் விமானப்படையின் தலைவர் மார்ஷல் சர் மைக் விக்ஸ்டன் கூறுகையில், ‘எங்களுக்கு பங்களிக்க ஒரு வாய்ப்பு இருந்தால், நாங்கள் தயாராக இருப்போம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
வன்முறை, தீவிரவாதம் தலை தூக்கும் எந்த இடத்திலும் அது இருக்கும். இது பிரித்தானியா மற்றும் நமது நட்பு நாடுகளுக்கு நேரடி அல்லது மறைமுக அச்சுறுத்தலாகும்’ என கூறினார்.
ஆப்கானிஸ்தானில் குறைந்தபட்சம் 2,000 ஐ.எஸ்.ஐ.எஸ்-கே போராளிகள் இருப்பதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தளபதி கென்னத் மெக்கென்சி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-கே நடத்திய இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதலில் இரு பிரித்தானியர்கள், 13 அமெரிக்க படை வீரர்கள் உட்பட கிட்டத்தட்ட 200பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.