இலங்கையில் மேலும் 2 ஆயிரத்து 340 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 38 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.