ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக 19இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் 19இலட்சத்து இரண்டாயிரத்து 407பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் ஈராக்கில், இதுவரை 20ஆயிரத்து 934பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 948பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 56பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 32ஆயிரத்து 715பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 896பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 17இலட்சத்து 48ஆயிரத்து 758பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.