இலங்கையில், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
சுகாதார ஆலோசனைகளை பொதுமக்கள் உரியவாறு பேணுவதால், நாட்டில் ஒக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சுகாதார ஒழுங்கு விதிகளை தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.