ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சஷேரில் நடைபெற்ற மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக போராளிக்குழு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து போராளிக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பஞ்சஷேரில் பல்வேறு மாவட்டங்களில் காலையிலிருந்து நடைபெற்றுவரும் மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் சரணடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஏனைய பிராந்தியங்களிலிருந்து போதுமான பொருட்கள் கிடைப்பதில் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பஞ்சஷேர் பள்ளித்தாக்கு பகுதிகளில் கண்ணிவெடி வைத்திருப்பதால் போராளிக்குழுகளை எதிர்த்து போராடுவது தலிபான்களுக்கு சிரமமாக உள்ளது. பள்ளித்தாக்கு பகுதிகளில் தொடர்ந்து போரிட்டுவருகிறோம் என தலிபான் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் தலைநகர் பஜராக் மற்றும் ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் சாலைகளில் கண்ணிவெடி வைக்கப்பட்டிருப்பதால் முன்னேறுவதில் சிரமம் இருக்கிறதுஎனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.