நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 81 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 84 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து 459 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.