நாட்டில் 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளை சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாநகரசபையின் வைத்தியர் தினூக குருகே தனது ருவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்மைய, நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரையில் இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.
அதன்படி, சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு, ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், போர்ப்ஸ் வீதி சனசமூக நிலையம், கெம்பல் பார்க் மைதானம், சாலிகா மண்டபம், ரொக்ஸி கார்டன் ஆகிய இடங்களில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.