கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களிலேயே குறித்த தரப்பினருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கொழும்பு மாவட்டத்தில் மேலதிகமாக விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் குறித்த மாவட்டங்களில் வசிப்பவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு தடுப்பூசியை பெற்று கொள்ள முடியும் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் 257 தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய இடங்களில் உள்ள 57 நிலையங்களில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.