கேரளாவில் நிபா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தின் எல்லையோரத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நிபா வைரஸ் பரிசோதனைகளை விரிவுப்படுத்தவும், காய்ச்சல் முகாம்களை எல்லையோரம் அதிகரிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் 10 சதவீதத்திற்கும் குறைவாக ஒரு நோயாளியிடமிருந்து மற்றொருவருக்கு பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.