அர்ஜெண்டீனாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அர்ஜெண்டீனாவில் கொவிட் தொற்றினால் 49இலட்சத்து ஆயிரத்து 31பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் அர்ஜெண்டீனாவில் இதுவரை 52இலட்சத்து மூவாயிரத்து 802பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 511பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 397பேர் பாதிக்கப்பட்டதோடு 67பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் ஒரு இலட்சத்து 90ஆயிரத்து 260பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 396பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.