பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் நிலை தமிகழத்தில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேற்கத்தேய நாடுகளில் கொரோனா தொற்றிக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து இன்று (திங்கட்கிழமை) எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்ரமணியம் மேற்படி கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே 97.5 சதவீத நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகிறது. இறப்பு சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனால் மூன்றாவது டோஸ் போடும் நிலை தமிழ்நாட்டில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் முதலில் அந்த பணி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.