தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாக பிரித்தானியா குறித்த தீர்மன்றத்தை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் குறிப்பிட்டார்.
அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடரில் இணைய வழியில் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நியூசிலாந்தில் இடம்போற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்தார்.
இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.