வடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெரும்பாலும் முக்கிய தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுவதாகவும், இதனால் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸாரின் சமீபத்திய தகவல்களின்படி ஜம்மு – காஷ்மீரில் உள்ளூர் பயங்கரவாதிகள் 11 பேர் உள்ளதாகவும், 40 முதல் 50 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.