பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) ராவல்பிண்டியில் நடைபெறவிருந்த நிலையில், திடீரென இரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, நியூசிலாந்து கிரிக்கெட் சபை தங்களுக்கு சில பாதுகாப்பு எச்சரிக்கைகள் இருப்பதாக எச்சரித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் தனிப்பட்ட முறையில் நியூஸிலாந்து பிரதமரிடம் பேசினார்.
அப்போது தங்களிடம் உலகின் மிகச்சிறந்த புலனாய்வு அமைப்பு ஒன்று உள்ளது என்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றும் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்தார். ஆனால், தற்போது இத்தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், பாகிஸ்தான் மற்றும் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் இரசிகளர் இந்த கடைசி நிமிட இரத்து மூலம் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்த தொடர் பின்னர் எப்போது மாற்றியமைக்கப்படும் என்ற தகவல் இல்லை. எனினும், இரு கிரிக்கெட் சபைகளும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாட இருந்தமை குறிப்பிடத்தக்கது.