கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறித்து அறிவியில் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமையம் விவாதிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பூஸ்டர் டோஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா பூஸ்டர் டோஸ் குறித்து அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமயம் விவாதிக்கப்படவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிர்ப்புப் பொருளை அளவிட வேண்டிய அவசியமில்லை என சில ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. அதேசமயம் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வது முக்கியம். அதில் எந்த சமரசமும் கூடாது’எனத் தெரிவித்துள்ளார்.