நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு உணவை விற்பனை செய்வார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 10 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.