அமெரிக்காவில் 65 வயதுக்கும் மேலானவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ், வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பு அமைப்பான ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
பூஸ்டர் டோஸ் பெறுபவர்கள் இரண்டாம் தவணை தடுப்பு மருந்து பெற்று குறைந்தது ஆறு மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.
நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் மூன்றாவது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேலும் ஊக்குவிக்க வழங்கப்படும் தடுப்பு மருந்து பூஸ்டர் டோஸ் எனப்படும்.