கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 16 ஆயிரத்து 720 பேர் பூரண குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 51 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 8 ஆயிரத்து 672 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.