இலங்கையில் சேதனப் பசளையை பயன்படுத்தி முன்னெடுக்கும் விவசாயத்திற்கு தேவையான அனைத்துவித உதவியையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் பிரதிநிதி ஜெனி கொரியா நியுனஸ் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்வதாகவும், இலங்கை அதை நோக்கி செல்வது ஒரு நல்ல விடயமாகக கருதுவதாகவும், இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்ய உதவ தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வின் போது பேசிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு தயாராகும் இச்சந்தர்ப்பத்தில் சேதனப் பசளை பயன்படுத்துவது குறித்து அச்சத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.