உலகம் முழுவதும் 600.2 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நேற்று (வியாழக்கிழமை) நிலவரப்படி, அதிகப்படியாக சீனாவில் 212.9 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு அடுப்படியாக, இந்தியா – 84.15 கோடி, ஐரோப்பா ஒன்றியம் – 65 கோடி, அமெரிக்கா – 46.6 கோடி, பிரேஸில் – 20.07 கோடி பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.04 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கொரோனாவால் 4.40 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.77 இலட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.