ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர்.
ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு வருகைத்தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உள்ளிடட அரசாங்கத்தின் உயர் மட்டத்துடன் ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையினை தற்காலிகமாக மீளப் பெறுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கோரியிருந்தது.
இந்த நிலையில், குறித்த குழு இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.