ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இருந்து நாட்டை மீட்பதற்கான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டின் வளங்களை தமது தனிப்பட்ட சொத்துக்களைப் போன்று இந்த அரசங்கம் விற்பனை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் இந்த நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு பதிலாக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் கெரவலப்பிட்டி மின்நிலையத்தை இரகசியமாக விற்று, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய துரோகத்தை அரசாங்கம் செய்துள்ளது என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.