ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.
பசுமைக் கட்சியினர் தங்கள் கட்சி வரலாற்றில் சிறந்த முடிவை அடைந்தனர், 14.8 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
எனினும், அரசாங்கத்தை அமைக்க இப்போது ஒரு கூட்டணி உருவாக்கப்பட வேண்டும். ஆட்சியமைக்கும் பெரும்பான்மைக்கு மூன்று கட்சிகள் தேவைப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை நீளமான மற்றும் கடினமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஜேர்மனியின் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய சில வாரங்கள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது.
தங்களுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் ககட்சியின் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.
அத்துடன், ‘தேசம் மாற்றத்திற்காக வாக்களித்ததாகவும், அடுத்த அரசாங்கத்தை உருவாக்கி வழிநடத்த தயாராக உள்ளோம்.
ஜெர்மனிக்கு ஒரு நல்ல, நடைமுறை அரசாங்கத்தை உருவாக்கும் வேலையை தொடங்கியுள்ளளோம்’ என கூறினார்.
ஜேர்மனியில் அங்கலா மெர்க்கலுக்கு பிறகு நாட்டின் தலைமை பதவிக்கு யார் வருவார் என்பதில் கடும் போட்டி நிலவிய நிலையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆர்மீன் லேஷெட் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.