உருதுவை ஆட்சி மொழியாக மாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் செயல் தலைமை நீதிபதி உமர் அதா பாண்டியால் தலைமையிலான மூன்று பேர் கொண்ட பெஞ்ச், நீதிமன்றத்தை அவமதிக்கும் மனுவிற்கு தலைமை வகித்து, உருது மொழியை ஆட்சி மொழியாக பயன்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் தாய்மொழி மற்றும் தேசிய மொழி இல்லாமல் நாங்கள் எங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என நீதிபதி பாண்டியல் கூறினார்.
அதாவது அவரின் கருத்துப்படி, நம் முன்னோர்களைப் போலவே நாமும் பாரசீக மற்றும் அரபு மொழியையும் கற்க வேண்டும் என்பதேயாகும்.
உருதுவை ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு கடந்த 2015 இல் மத்திய அரசு தவறியதையே உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது என CGP தெரிவித்துள்ளது.
“அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 251 பிராந்திய மொழிகளுடன் தாய் மொழியையும் குறிப்பிடுகிறது,” என கூறி, பஞ்சாப் அரசாங்கத்திடம் பஞ்சாபியை அறிமுகம் செய்ய தாக்கல் செய்ததற்கு பதில் அளிக்குமாறு தலைமை நீதிபதி கோரினார்.
இதேவேளை சட்டத்தரணி கோகாப் இக்பால், உருது மொழியைப் பயன்படுத்தாததற்காக நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதேசமயம் பஞ்சாபியை (அதிகாரப்பூர்வ மொழியாக) மாகாணத்தில் அறிமுகப்படுத்தாததற்காக பஞ்சாப் அரசுக்கு எதிராக குடிமகன் வைத்தியர் சாமியால் நீதிமன்ற அவமதிப்பு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், மத்திய மற்றும் பஞ்சாப் அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒரு மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் பிரதமர் இம்ரான் கான், உருது மொழியில் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது தேசிய மொழிக்கு உரிய மரியாதை அளிப்பதையும் அதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டது.
மேலும், பிரதமருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் தேசிய (உருது) மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பதை பிரதமர் வரவேற்கின்றார் என்று ஜூன் மாதம் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறித்த அலுவலக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, பிரதமரின் மேற்கண்ட வழிகாட்டுதல்களைச் செயற்படுத்துவதற்கு மேலும் தேவையான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அனைவராலும் எடுக்கப்படும்.
அத்துடன் பிரதமர் தேசிய மொழியை ஊக்குவிப்பதற்கும் உரிய மரியாதை அளிப்பதற்கும் உறுதியுடன் இருக்கிறார் என பிரதமர் அலுவலகம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.