அரபிக் கடலில் புதிய புயல் சின்னம் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த புயல் இன்று (வியாழக்கிழமை) மேற்க்கு கரைகளில் பலத்த காற்றுடன் வீசும் என்றும் நாளைய தினம் பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் குஜராதின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சவுராஷ்ட்ரா, கொங்கண் மண்டலங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை வங்கக் கடலில் ஏற்பட்ட குலாப் புயல் தற்போது வலுவிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.