பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்த மக்களுக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய மம்தா பானர்ஜி, “இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி.
பவானிபூர் தொகுதியில் 58 ஆயிரத்து 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்.
மேலும், நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. வங்கத்தில் தேர்தல் தொடங்கியதில் இருந்து மத்திய அரசு எங்களை அகற்ற சதித் திட்டங்களை தீட்டியது.
நான் தேர்தலில் போட்டியிடாதபடி என் காலில் காயம் ஏற்பட்டது. எங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.
இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.