கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக, 28ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக 28,001பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 28ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 40ஆயிரத்து 606பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,405பேர் பாதிக்கப்பட்டதோடு 48பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 44ஆயிரத்து 320பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 15இலட்சத்து 68ஆயிரத்து 285பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.