எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன விமானப்படையினரின் நடமாட்டம் அதிரித்துள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி தெரிவித்துள்ளார்.
விமானப்படையின் 89 ஆவது ஆண்டு விழா தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், இந்திய விமானப்படை விமானங்களும், முழு அளவில் அப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரஃபேல் விமானங்களும், அப்பாச்சி ரக ஹெலிகொப்டர்களும் விமானப்படையில் இணைத்தது, இந்தியாவின் போர் திறனை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.