தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையைக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஒப்பந்தத்தை கடைபிடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பதை தெளிவுபடுத்திய நிலையில் இதற்கு இருதரப்பும் இணங்க ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
தாய்வானை தனது சொந்த பிரதேசம் என கூறிவரும் சீனா, தேவைப்பட்டால் அதனை வலுக்கட்டாயமாக எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு சீனாவே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்வான், தாங்கள் ஒரு சுதந்திர நாடு என்றும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நான்கு நாட்களில் தாய்வானின் வான் எல்லைப்பகுதியில் சீனாவின் 148 விமானங்கள் சட்டவிரோதமாக பயணித்ததாக அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் தாய்வான் அருகே இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனாவை வலியுறுத்தியது.