சர்ச்சைக்குரிய புகலிடம் தடுப்பு ஒப்பந்தத் நிறைவுக்கு வரும் நிலையில் புகலிடம் கோருவோரை பப்புவா நியூ கினியாவுக்கு அனுப்புவதை நிறுத்த அவுஸ்ரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது.
படகு மூலம் அவுஸ்ரேலியா வை அடைய முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக கான்பெர்ராவால் வழங்கப்பட்ட இரண்டு பசிபிக் நாடுகளில் பப்புவா நியூ கினியாவும் ஒன்றாகும்.
இந்நிலையில் குறித்த நாட்டுடனான ஏற்பாடு இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என அவுஸ்ரேலியா கூறியுள்ளது.
இருப்பினும் அவுஸ்ரேலியாவின் வலுவான எல்லை பாதுகாப்பு கொள்கைகள் மாறவில்லை என உள்துறை அமைச்சர் கரேன் அண்ட்ரூஸ் இன்று புதன்கிழமை கூறினார்.