வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைககள் நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறார்களுக்கான தடுப்பூசியேற்றும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.















