கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இவ்வாறு தெரிவித்துள்ளது.
பாராத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்க அங்கீகாரம் வழங்கக்கோரி உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது.
அங்கீகாரம் வழங்குவதில் மேலும் கால தாமதம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.