வேல்ஸில் உள்ள அனைத்து வணிகங்களும் குளிர்காலம் முழுவதும் திறந்திருக்கும் என்று வேல்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வேல்ஸ் மெதுவாக தொற்றுநோயிலிருந்து வெளியேறி, கொரோனா வைரஸ் பருவகால நோயாக மாறும் நிலைக்கு சாத்தியமான சூழ்நிலை இருப்பதாக அமைச்சர்கள் கூறினர்.
ஆனால், முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட், வேல்ஸ் எச்சரிக்கை நிலை பூஜ்ஜிய நிலையில் இருப்பதாக கூறினார்.
அத்துடன், புதிய கொவிட் மாறுபாடு தேசிய சுகாதார சேவையை மூழ்கடித்தால், கொவிட் அவசர திட்டம் இருப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.
வேல்ஸின் கொவிட் தொற்று வீதங்கள் செப்டம்பர் நடுப்பகுதிக்கு பிறகு முதல் முறையாக 100,000க்கு 500க்கும் குறைவாக குறைந்து வருகிறது.