தென்மேற்கு பருவமழை இன்னும் 10 நாட்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், அதன் பிறகே வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவயிரசன் கூறுகையில், தற்போதைய நிலையில், வடக்கு அந்தமான், மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.