மட்டக்களப்பு- பெரியகாலபோட்டமடு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வவுணதீவு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து, தாண்டியடி விசேட அதிரடிப்படையினரும் இணைந்து குறித்த கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
பெரியகாலபோட்டமடு பிள்ளையார் ஆலயத்துக்கு பின்புறம் உள்ள வயற்காணியில் விதைப்பிற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொள்ளும்போது, கைக்குண்டுகளை கண்ட காணி உரிமையாளர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த நான்கு கைக்குண்டுகளையும் அவர்கள் மீட்டுள்ளனர்.
இந்த 4 கைக்குண்டுகளும் கடந்த யுத்த காலப்பகுதியில் கைவிடப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.