சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.76 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது.
ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து மூன்று மாதங்களுக்குள் வெள்ளம் வந்து 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கனமழை மற்றும் நீடித்த மழை மற்றும் புயல்கள், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாக சீனாவின் வானிலை நிர்வாகம் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளது.
120,000க்கும் அதிகமான மக்கள் அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும், ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள், சின்{ஹவா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர். மேலும், 189,973 ஹெக்டேர் பயிர்களும் முற்றிலும் நாசமாயின.
நிலச்சரிவின் விளைவாக நான்கு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக அரசாங்கம் நடத்தும் குளோபல் டைம்ஸ் கூறுகிறது. இருப்பினும் மற்ற உயிரிழப்புகள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹெனானில் ஏற்பட்ட வெள்ளத்தை விட ஷான்சி வெள்ளம் மோசமானது என தெரிவிக்கப்படுகின்றது.
ஷாங்க்சியின் மாகாண தலைநகர் தையுவான் கடந்த வாரம் சராசரியாக 185.6 மிமீ மழைப்பொழிவைக் கண்டது.