கிழக்கு மாகாணம் மற்றும் மலையகப் பெருந்தோட்ட பகுதிகளை சார்ந்த பின்தங்கிய பிரதேசங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க இருக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது .
குறித்த நிகழ்வில் பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அல் காசிம்(dr. Alka Singh) , UNICEF நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian skoog, பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் வைத்தியர் அமல் ஹரிச டி சில்வா என அமைச்சின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.