இணையவழி ஊடான கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து தொடர்ந்தும் விலகியிருக்க ஆசிரியர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கம் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பை அடுத்து இன்று ஆசிரியர் தொழிற்சங்ககங்கள் ஒன்றுகூடி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டத்தை தொடரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று பிரதமருடனான கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.